உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகநரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் : திரளாக பக்தர்கள் பங்கேற்பு

யோகநரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் : திரளாக பக்தர்கள் பங்கேற்பு

உத்தமபாளையம்; உத்தமபாளையம் யோகநரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் கொண்டாடப்பட்டது. இங்குள்ள ஆண்டாள் தனிச் சன்னதியில் சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் எழுந்தருளினார்.

உத்தமபாளையம் யோகநரசிங்கபெருமாள் கோயில் 600 ஆண்டுகள் பழமையானதாகும். சமீபத்தில் இங்குள்ள ஒம் நமோ நாராயணா பக்த சபையினரால் நீண்ட காலத்திற்கு பின் திருப்பணி செய்யப்பட்டு ( பல்வேறு உபயதாரர்களை கொண்டு ) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு தனி சன்னதியில் ஆண்டாள் உள்ளார். நேற்று ஆண்டாள் பிறந்தநாள் ஆடிப்பூரம் விழாவாக கொண்டாடப்பட்டது. ஆண்டாள் அலங்கார திருமஞ்சனத்தில் இருந்தார். சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு முன்னதாக பால், திரவியங்கள், மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கில் பெண்கள் பங்கேற்றனர்.. ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பொங்கல், தயிர்சாதம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளஞ்செழியன், உபயதாரர் பழனிவேல்ராசன், ஓம் நமோ நாராயணா பக்த சபை தலைவர் ஹரஹர அய்யப்பன், செயலாளர் ரவி, பக்த சபை உறுப்பினர்கள் அசோக், பாலமுருகன், ஞானவேல் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !