உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி பூரம்; வளையல் அலங்காரத்தில் அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன்

ஆடி பூரம்; வளையல் அலங்காரத்தில் அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கோவில் முழுவதும் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டது. காலையிலிருந்து பக்தர்கள் வரிசையாக நின்று அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், கோவில் டிரஸ்ட் ராஜரத்தினம், உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர். ஆடி பூரத்தை முன்னிட்டு பத்ரகாளி அம்மன், ஆயிரங்கண் மாரியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !