திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு புதிய குதிரை வாகனம்
ADDED :822 days ago
கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. கோவிலில் திருப்பதி போன்று பிரமோற்சவ திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சுவாமி பவனி வர 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக ஐந்து புதிய வாகனங்கள் கடந்த வருடம் கொண்டு வரப்பட்டன. தற்போது குதிரை வாகனம் கும்பகோணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. குதிரை வாகனத்திற்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். வாகனத்தை நன்கொடையாக கொடுத்த கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தில் பணியாற்றும் தெலுங்கு குடும்பத்தினர் மற்றும் கோவில் கண்காணிப்பாளர் லட்சுமிபதி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.