உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குச்சனூரில் தற்காலிக கழிப்பறைகள் : பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை தேவை

குச்சனூரில் தற்காலிக கழிப்பறைகள் : பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை தேவை

சின்னமனூர்: குச்சனூரில் ஆடிப்பெருந்திருவிழா துவங்கி உள்ளது. சனிக்கிழமை என்றில்லாமல் தினமும் கூட்டம் வருகிறது. பெண்களுக்கென தற்காலிக கழிப்பறைகள் அமைக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென தனி கோயில் குச்சனூரில் மட்டுமே உள்ளது. ஆண்டு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தினமும் பக்தர்கள் திரளாக வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடிப்பெருந்திருவிழா கொண்டாடப்படும். ஆடி மாத சனிக்கிழமைகளில் திருவிழா விமரிசையாக நடைபெறும். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடுவார்கள். இந்தாண்டு தற்போது திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த சனிக்கிழமையன்று துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு கழிப்பறை வசதி போதிய எண்ணிக்கையில் கிடையாது. வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நகரில் குறிப்பிட்ட சில இடங்களில் தற்காலிக கழிப்பறைகளை பெண்களுக்கென ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் அமைக்க வேண்டும். திருவிழா முடிந்தபின் தற்காலிக கழிப்பறைகளை அகற்றி கொள்ளலாம். அத்துடன் ஏற்கெனவே உள்ள கழிப்பறைகளையும் சுத்தமாக வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !