செட்டிபாளையம் அம்மன் கோவிலில் ஓலையக்கா நோன்பு
அன்னூர்: செட்டிபாளையம் அம்மன் கோவிலில், ஓலையக்கா நோன்பு வரும் 27ம் தேதி நடக்கிறது.
மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் உள்ள உம்மத்தூர் உருகாதேஸ்வரி அம்மன் கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஓலையக்கா நோன்பு நடைபெறும். கொரோனா காரணமாக மூன்று ஆண்டுகளாக தடைபட்டு இந்த ஆண்டு நடக்கிறது. வரும் 27ம் தேதி காலை 7:30 மணிக்கு உருகாதேஸ்வரி அம்மனுக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை நடக்கிறது. 9:00 மணிக்கு ஓலையக்கா விநியோகிக்கப்படுகிறது. 10:00 மணிக்கு ஓலையக்காவை ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வரும் வைபவமும், இதையடுத்து பிரசாதம் படைத்து தீபாராதனை செய்து கும்மி அடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு ஓலையக்காவை கூடையில் எடுத்துக்கொண்டு கும்மி அடித்து கோவிலை சுற்றி எடுத்து வந்து அக்னி குண்டத்தில் இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 28ம் தேதி காலை 10:00 மணிக்கு, அம்மனை குளிர்விக்க, பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெறலாம் என நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.