உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை முத்துமாரியம்மன் கோயிலில் 71ம் ஆண்டு உற்ஸவ விழா

கீழக்கரை முத்துமாரியம்மன் கோயிலில் 71ம் ஆண்டு உற்ஸவ விழா

கீழக்கரை: கீழக்கரை தட்டான்தோப்பு தெருவில் உள்ள மேலக்கொடிக்கால் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் 71ம் ஆண்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஜூலை 18 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஜூலை 24ல் விளக்கு பூஜையும், இன்று காலை 8:00 மணியளவில் ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் இருந்து நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குடம் ஊர்வலம் முத்துமாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை மாலை 6:00 மணியளவில் சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை மேலக்கொடிக்கால் நாடார் உறவின்முறையினர், விழா குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !