உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்ன வாகனத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் சுந்தரராஜ பெருமாள் வலம்

அன்ன வாகனத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் சுந்தரராஜ பெருமாள் வலம்

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில், பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில், நேற்று காலை கொடியேற்றத்துடன் ஆடி திருவிழா துவங்கியது. தொடர்ந்து மாலை பெருமாள் அன்ன வாகனத்தில், வெண்பட்டு உடுத்தி கொண்டையிட்டு, கையில் தங்க கிளி ஏந்தி நாச்சியார் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். பின்னர் மேளதாளம் முழங்க பிரபந்தம் மற்றும் பாகவதர்கள் பஜனை பாடியபடி திருவீதி வலம் வந்தார். இன்று காலை ஏகாந்த சேவையில் மயில் கொண்டையிட்டு ரத வீதிகளில் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து சிம்ம வாகனம், இன்று சேஷ வாகனத்தில் அருள் பாலிக்கிறார். ஆக., 31 காலை நவநீத கிருஷ்ணன் சேவையும், இரவு வைகை ஆற்றில் குதிரை வாகனத்திலும் கள்ளழகர் திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !