உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜை; அம்மனுக்கு பாலாபிஷேகம்

பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜை; அம்மனுக்கு பாலாபிஷேகம்

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் மறுபூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனிப்பெருந் திருவிழா ஜூலை 10ல் துவங்கி, ஜுலை 19ல் நிறைவுற்றது. 10 நாட்கள் நடந்த திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் கவுமாரியம்மனை தரிசித்தனர். தினமும் அம்மன் ரிஷபம், குதிரை, சிம்மம், அன்னபட்சி, யானை மின் ஒளி, பூ பல்லாக்கில் வீதி உலா வந்தார்.

மறுபூஜை: பெரியகுளம் தீர்த்த தொட்டியில் பால்குடம்‌ எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். பக்தர்கள் மா விளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். அம்மன் ஐஸ்வர்யம் அலங்காரத்தில் காட்சியளித்தார். மின் ஒளி அலங்காரத்தில் வீதி உலா வந்தார். பெரியகுளம் தையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் மண்டகப்படி செய்தனர். ஏற்பாடுகளை செயல்அலுவலர் ராமதிலகம், பூஜாரிகள் முருகன், ராஜசேகர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !