உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்

மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு பிராமணர்கள் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தனர்.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி செவ்வாயான நேற்று பிராமணர்கள் சார்பில் பால்குடம், எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஐயப்பன் கோயிலில் தொடங்கி, ஊர்வலமாக வந்து மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலை வந்தடைந்தனர். கோயிலில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பால் குடங்கள் செலுத்தப்பட்டது. ஜூலை 28 திருவிளக்கு பூஜையும் ஆக. 4 ஆம் தேதி 1008 சங்காபிஷேகமும் ஆக. 11 கோமாதா பூஜையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !