ரெகுநாதபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா
ADDED :803 days ago
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் மேலவலசையில் உள்ள செங்குந்தர் முதலியார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது நாள்தோறும் இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்டவைகள் நடந்தது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சக்தி கரகம் முன்னே செல்ல முளைப்பாரி சுமந்து ஏராளமான பெண்கள் நகரின் முக்கிய வீதியில் உலா வந்தனர். முத்துநாச்சியம்மன் கோயில் பின்புறம் உள்ள பெரிய ஊரணியில் முளைப்பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கிராமத் தலைவர் ஆதிமுத்து, சமுதாயத் தலைவர் குணசேகரன், செயலாளர் தேவதாஸ், பொருளாளர் சந்தானம், ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன், முத்துசாமி, முத்துமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.