உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் நாயன்மார்கள் திருக்கயிலாயம் செல்லும் நிகழ்வு: பக்தர்கள் பரவச தரிசனம்

நெல்லையப்பர் கோயிலில் நாயன்மார்கள் திருக்கயிலாயம் செல்லும் நிகழ்வு: பக்தர்கள் பரவச தரிசனம்

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் திருக்கயிலாயத்தில் ஐக்கியமாகும் நிகழ்வு நடந்தது. நெல்லை காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை வாகனத்திலும், சேரமான் பெருமான் குதிரை வாகனத்திலும் திருக்கயிலாயம் செல்லும் நிகழ்வு நடந்தது. முன்னதாக சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான், 63 நாயன்மார்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ரதவீதிகளில் உலா வந்தனர். தொடர்ந்து கோயிலில் வைத்து சுந்தரமூர்த்தி நாயனார், வெள்ளை யானை வாகனத்திலும், சேரமான் பெருமான் குதிரை வாகனத்திலும் திருக்கயிலாயம் செல்லும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து சோடஷ தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !