பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை
ADDED :850 days ago
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடைபெற்றது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் சுந்தரமூர்த்தி நாயனார் நடைபெற்றது. இதில் சண்முக நதிலிருந்து புனித நீர் நிரப்பிய கலசங்களுக்கு யாக பூஜை நடந்தது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு யாக பூஜை வைக்கப்பட்ட புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது. 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாலை சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார்.