புனித சந்தனமாதா ஆலய ஆண்டு திருவிழாவில் மின் அலங்கார தேர்பவனி
ADDED :850 days ago
காரைக்கால்: காரைக்காலில் புனித சந்தனமாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மின் அலங்கார தேர்பவனி நடந்தது. காரைக்கால் பிள்ளைத்தெரு வாசலில் புனித சந்தனமாதா ஆண்டு திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 25ம் தேதி சிறிய தேர்பனியும் அதைத்தொடர்ந்து நற்செய்தி கூட்டம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று 26ம் தேதி திருவிழா திருப்பலியும் மின்விளக்கு அலங்கார தேர்பவனி துணை பங்கு தந்தை ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இன்று திருவிழா திருப்பலியும் கொடிஇறக்குதல் நிகழ்ச்சி நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரோக்கியதாஸ் தலைமையில் கிராம நிர்வாகிகள் சின்னப்பன்.அந்தோணிசாமி.தனபால் உள்ளிட்ட பலர் சிறப்பாக செய்திருந்தனர்.