அழகிய பெருமாள் கோவிலுக்கு பூமி பூஜை
ADDED :801 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய பெருமாள் கோவில் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடந்தது.
அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிய பெருமாள் கோவில் உள்ளது. கோவில் சிதிலமடைந்து சாமி விக்கிரகங்களும் கல் கட்டிடங்களும் சேதமடைந்து பக்தர்கள் தரிசிக்க முடியாமல் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து உள்ளது. தற்போது அரசு பொறுப்பில் உள்ள இந்த கோயிலை புனரமைப்பதற்கு சிங்கப்பூர் தொழிலதிபர் தாமோதரன் குடும்பத்தினர் உபயதாரர்களாக முன் வந்தனர். இதை யடுத்து நேற்று அனைத்து சமுதாய பொதுமக்கள் முன்னிலையில் கோயிலில் வாஸ்து பூஜை நடந்தது. திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ராஜா, ஸ்ரீராம் பட்டர்கள் தலைமையில் வேத விற்பனர்கள் மந்திரங்களை முழங்க பூஜைகள் நடந்தது.