உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமலர் செய்தி எதிரொலி; மடப்புரத்தில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்

தினமலர் செய்தி எதிரொலி; மடப்புரத்தில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தினமலர் செய்தியை அடுத்து மாற்றுதிறனாளி பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளும் டூவீலர்களை கோயில் வரையிலும் போலீசார் அனுமதித்தனர். மடப்புரத்தில் நேற்று ஆடி இரண்டாவது வெள்ளிகிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் களை கட்டும், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி கிழமைகளில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருவதுண்டு, நேற்று ஆடி இரண்டாவது வெள்ளிகிழமை என்பதால் மதுரை, சிவகங்கை, மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மதியம் ஒரு மணிக்கு உச்சி கால பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.மாற்றுத்திறனாளி பக்தர்கள் தரிசனம் செய்ய போதிய வசதிகள் இல்லை என்றும், டூவீலர்களை கோயில் வரையில் அனுமதிக்க வேண்டும் என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து கோயில் வாசல் வரை டூவீலர்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும் கோயிலினுள் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை வசதி உள்ளதாக போலீசார் மைக்கில் அறிவித்தபடி இருந்ததால் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தரிசனம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !