கருவலூர் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :802 days ago
அவிநாசி: கருவலூர் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஹிந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை வழிகாட்டுதலின்படி, கருவலூர் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், அறங்காவலர் அர்ஜுனன் மற்றும் கோவில் செயல் அலுவலர் குழந்தைவேல், உபயதாரர் புவனா சிவகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.