உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்களத்தியம்மன் கோவிலில் ஆடி இரண்டாம் வெள்ளி சிறப்பு பூஜை

முக்களத்தியம்மன் கோவிலில் ஆடி இரண்டாம் வெள்ளி சிறப்பு பூஜை

திட்டக்குடி: திட்டக்குடி முக்களத்தியம்மன் கோவிலில் ஆடிமாத இரண்டாம் வெள்ளி மற்றும் ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி முக்களத்தியம்மன் எல்லை தெய்வமாக உள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் ராகு கால பூஜை சிறப்பு வாய்ந்தது. இந்த பூஜையால் தீராத கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று ஆடி மாத இரண்டாம் வெள்ளி மற்றும் ராகுகால பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு, முக்களத்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, எலுமிச்சை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் திட்டக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !