உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானம்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தேவதானம்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

செஞ்சி: தேவதானம்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு மகாபாரத சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வந்தனர். 16ம் தேதி முதல் பாரத தெரு கூத்தும் நடந்து வந்தது. 25ம் தேதி கர்ண மோட்சமும், 26ம் தேதி பதினெட்டாம் நாள் போரும், 27 ம் தேதி தீமதி விழாவும் சாமி வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !