செந்துறை ஆதிபராசக்தி கோவிலில் மழைவேண்டி கஞ்சி கலய ஊர்வலம் பக்தர்கள் பரவசம்
செந்துறை, நத்தம் அருகே செந்துறை ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் உலக நன்மை வேண்டியும், மழைவேண்டியும்,விவசாயம் செழிக்க வேண்டியும் நடந்த கஞ்சி கலய ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் சிறுவர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.
நத்தம் செந்துறையில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் உள்ளது. இங்கு உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டிய பக்தர்கள் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் செந்துறை சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பெண்கள், சிறுவர்கள் சிகப்பு மற்றும் மஞ்சள் ஆடைகள் அணிந்து, கையில் வேப்பிலையுடன், தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் இருந்து ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் மகாலட்சுமி கோவில், சந்தப்பேட்டையில் உள்ள முருகன் கோவில் விநாயகர் முத்தாலம்மன் கோவில் குரும்பபட்டி வீதி, ஐயப்பன் கோவில் வழியாக கோவிலுக்கு பக்தி பரவசத்துடன் சென்றனர். பின்னர் அம்மனுக்கு கஞ்சி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக கஞ்சி வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.