திருப்பரங்குன்றம் மலைப் படிக்கட்டுகளில் சோலார் மின் விளக்குகள்
ADDED :848 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அருகே கிரிவல ரோட்டில் இருந்து மலை மேல் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளில் மின்விளக்குகள் முன்பு பொருத்தப்பட்டிருந்தது. அதில் சிலவற்றை குரங்குகள் உடைத்தன. பல லைட்டுகளை மர்ம மனிதர்கள் உடைத்து விட்டு சென்றனர். இதனால் படிக்கட்டு பகுதிகளில் இருட்டாக இருந்தது. அப்பகுதிகளில் 15 இடங்களில் உபயதாரர் மூலம் சுப்ரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் உடைக்கமுடியாத வகையில் சோலார் மின்விளக்குகள் அமைத்துள்ளனர்.