பழநி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :1171 days ago
பழநி: பழநியில் சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பழநி கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், அடிவாரம் மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன் கோயில், வேளீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது.