/
கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரம்மோற்சவம்: வெள்ளி கவசத்தில் பராசக்தி அம்மன்
அருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரம்மோற்சவம்: வெள்ளி கவசத்தில் பராசக்தி அம்மன்
ADDED :880 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரபிரம்மோற்சவ ஒன்பதாம் நாளை யொட்டி, சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி கவசத்தில், எழுந்தருளிய பராசக்தி அம்மன் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று விடுமுறை தினம் என்பதால் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோவில் தங்க கொடி மரம் அருகே சுற்றி திரியும் நாய்களால் பக்தர்கள் பெரும் அச்சத்துடனே தரிசனம் செய்ய சென்றனர். ராஜகோபுர அருகே மாடவீதி சாலையில், வரிசையாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால் பக்தர்கள் சிரம்மபட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.