காணிக்கையின் அடிப்படையில் தான் கடவுள் அருள்புரிகிறாரா?
ADDED :827 days ago
குருவநம்பி என்னும் அடியவர் மண்ணால் செய்த மலர்களை வெங்கடேசப் பெருமாளுக்கு காணிக்கையாக்கி வழிபட்டார். தொண்டைமான் சக்கரவர்த்தி தங்கமலர்களால் அவரை அர்ச்சித்தார். குருவநம்பியின் பக்தியை பெருமாள் ஏற்றுக் கொண்டார். ஒரு துளசி இலை, மலர், தண்ணீர் எதை அன்போடு கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டு அருள் புரிவதாக கீதையில் கிருஷ்ணரே கூறுகிறார். கடவுள் விரும்புவது பணத்தை அல்ல. அன்பு மனதைத் தான்.