உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு: கோயில்களில் சிறப்பு வழிபாடு.. நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள்

ஆடிப்பெருக்கு: கோயில்களில் சிறப்பு வழிபாடு.. நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள்

வத்திராயிருப்பு : ஆடிப்பெருக்கை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே திரண்டு வழிபட்டனர்.

வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் சுவாமிக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. அங்குள்ள சுப்பிரமணியசுவாமி சன்னதியில் நடந்த பூஜையில், பக்தர்கள் பாராயண வழிபாடு செய்தனர்.கூமாப்பட்டி சுப்பிரமணியர் கோயிலில் சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகங்களும், சுவாமிக்கு சந்தனக்காப்பும் நடந்தது.


அயன்நத்தம்பட்டி வழிவிடு முருகன் கோயிலில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் சஷ்டி பாராயண வழிபாடு நடந்தது.சுந்தரபாண்டியம் வைகுண்டமூர்த்தி அய்யனார் கோயில், பாவடித்தோப்பு வடிவேல் முருகன் கோயில், முக்குரோடு வழிவிடு விநாயகர் கோயில்களில் அபிஷேகம், , அய்யனார் கோயிலில் அன்னப்படையல் வழிபாடும் நடந்தது.

விருதுநகர்: சூலக்கரை ஆதிபகவன் கோயிலில் விநாயகர், சூரியபகவான், மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகங்களும், பின் சர்வ அலங்காரத்துடன் தீபாராதணை வழிபாடும் நடந்தது. பொங்கல் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் சுப்பிரமணியன், வசந்தா, ராஜேஸ்வரி, சங்கரநாராயணன் செய்தனர். பக்தர்கள் திரளாக வழிபட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !