உலக நன்மை வேண்டி உலகளந்த பெருமாள் கோவிலில் விஷ்ணு துர்க்கைக்கு லச்சார்ச்சனை
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உலக நன்மை வேண்டி விஷ்ணு துர்க்கைக்கு லச்சார்ச்சனை நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மூலவர் சன்னதி அருகே விஷ்ணு துர்க்கை தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இத்தல விஷ்ணு துர்க்கையை வழிபட்டால் கேட்டவரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிறப்பு வாய்ந்த இச்சன்னதியில் நேற்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் உலக நன்மை வேண்டி லச்சார்ச்சனை விழா நடந்தது. காலை 6:00 மணிக்கு துர்க்கைக்கு மகா அபிஷேகம், அலங்காரம்,7:30 மணிக்கு அர்ச்சனை துவங்கி மதியம் 12:00 மணி வரையும், பின்னர் மாலை 3:00 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை பட்டாச்சாரியார்களால் லட்சார்ச்சனை நடந்தது. கோவிலின் ராஜகோபுரம், மேற்கு ராஜகோபுரம், கட்டை கோபுரம் ஆகியவற்றின் திருப்பணிகள் சிறப்பாக நடக்கவும், உலக நன்மை வேண்டி ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் ஏற்பாட்டில் நடந்த இப்பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.