உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் முகூர்த்தகால் நடும் பணி

பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் முகூர்த்தகால் நடும் பணி

பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் பணி நடந்தது.


பழநி மேற்கு ரத வீதியில்,முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக பணிகள் நடைபெற ஏப்.17., கோயில் விமான பாலாலயம் நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று (நவ.,10) காலை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலச பூஜை நடைபெற்று கோயில் பிரகாரத்தில் எடுத்து வந்து முகூர்த்தக்கால் நடும் பணி நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கந்த விலாஸ் விபூதி ஸ்டார் உரிமையாளர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் கோயில் கும்பாபிஷேகம் டிச.,1 நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !