உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் சந்தைப்பேட்டை அருகே மகாமாரியம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஆடி பவுர்ணமியையொட்டி, திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !