உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுருகன்பூண்டி ஆதி முத்து மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

திருமுருகன்பூண்டி ஆதி முத்து மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சியில் எழுந்தருளியுள்ள ஆதி முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் எழுந்தருளியுள்ள ஆதி முத்து மாரியம்மன் கோவிலில் மூன்றாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், நோயற்ற உலக நன்மைக்காகவும், வறட்சியில்லாத பூமியாக மாற்றம் அருளி நீர் நிலைகளில் வற்றாத நீர் பிடிப்புடன், தானியங்கள் செழித்து வளர, மழை பொழிவு பெய்ய வேண்டி 108 திருவிளக்கு பூஜையை, கோவில் பூசாரி குமாரவேல் ஏற்பாட்டில் நடத்தினார். இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !