குழந்தைகளை தேருக்கடியில் படுக்க வைத்து நேர்த்திக்கடன்!
ADDED :4759 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ,குழந்தைகளை தேருக்கு அடியில் படுக்க வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தில், புரட்டாசி மாத உற்சவம் நடந்தது. இதனையொட்டி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக நடந்த தேரோட்டத்தின் போது, பக்தர்கள் வேண்டுதலின்பேரில் குழந்தைகளை, தேருக்கு அடியில் படுக்க வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பெண்கள் ஒயிலாட்டம் ஆடினர்.