வடமதுரையில் வேள்வி பூஜை ; பக்தர்கள் ஊர்வலம்
ADDED :877 days ago
வடமதுரை: வடமதுரையில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 20 வது ஆண்டு விழா நடந்தது. கலச விளக்கு, வேள்வி பூஜைக்கு பின்னர் 300க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள். முளைப்பாரி, கஞ்சி கலயங்களுடன் ஊர்வலம் சென்றனர். இ.பி.காலனி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் துவங்கிய ஊர்வலம், திண்டுக்கல் ரோடு, தேரடி வீதிகள், ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியே நகரை வலம் வந்தது. விழா ஏற்பாட்டினை மன்ற தலைவர் சாந்தி, துணைத் தலைவர் பிரியா, பொருளாளர் வசந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.