காளஹஸ்தி, விக்ஞான மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி பரணி உற்சவம்
ADDED :872 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயிலான விக்ஞான மலை மீது வீற்றிருக்கும் வள்ளி தேவையானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி கிருத்திகை விழாவில் இன்று பரணி உற்சவத்தையொட்டி சாமி அம்மையார்கள் உற்சவமூர்த்திகள் யாளி வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்ததோடு கோயில் கோயிலில் உள்ள செங்கல்பராயர் சுவாமி சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு யாளி வாகனத்தில் மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.