வேதாரண்யம் புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி
ADDED :4849 days ago
வேதாரண்யம்: அகஸ்தியம்பள்ளி புனித செபாஸ்தியர் ஆலய விழாவையொட்டி, புனித தேர்பவனி வெகு விமர்சையாக நடந்தது.வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளியில் கடிநெல்வயல் பங்கை சேர்ந்த புனித செபாஸ்தியார் ஆலய, 13வது ஆண்டு பெருவிழா கடந்த, 29ம் தேதி துவங்கியது. விழாவில் நேற்று முன்தினம் இரவு கடிநெல்வயல் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பின்னர், மின்விளக்கால் அலங்கரித்த புனித செபாஸ்தியார் தேர் பவனி வெகுவிமரிசையாக நடந்தது. விழா ஏற்பாட்டை கடிநெல் வயல் பங்குத்தந்தை வின்சென்ட், கிராமத்தலைவர் அருள்நாதன் மற்றும் மாதா இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.