உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் 31 வது ஆவணி திருவிழா

பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் 31 வது ஆவணி திருவிழா

பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் 31 வது ஆண்டு ஆவணி திருவிழா மற்றும் பால்குட விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் மகாஜன உறவின்முறை குடி மக்களுக்கு பாத்தியமான இக்கோயிலில், இன்று காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்து, பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டினர். பின்னர் மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தன. இதேபோல் தினமும் காலை 10:00 மணிக்கு அபிஷேகம் நடந்து, இரவு 7:00 மணிக்கு அம்மன் மீனாட்சி, காமாட்சி, குமரி, சரஸ்வதி, மகாலட்சுமி, சிவ பூஜை, ராஜராஜேஸ்வரி மற்றும் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள் பாலிக்க உள்ளார். தொடர்ந்து ஆக., 18 அன்று காலை 7:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து, விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் ஏந்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அன்று மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை நடராஜன் தலைமையிலான விழாக் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !