உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி கிருத்திகை... துடியலூர் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கிருத்திகை... துடியலூர் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

சின்னதடாகம் அருகே உஜ்ஜையனூரில் சுயம்புவாக எழுந்தருளி உள்ள காவடி முருகன், வள்ளி, தெய்வானை கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதே போல் வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில், இடிகரை வில்லீஸ்வரர் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !