பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் மண்டலாபிஷேகம்
ADDED :843 days ago
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நேற்று மண்டல அபிஷேக விழா நடந்தது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த, விஷாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் கடந்த ஜூன் 28 மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து நேற்று மண்டல பூஜை நிறைவையொட்டி, காலை 7:15 மணி தொடங்கி அணுக்கை, கணபதி பூஜையுடன், கும்ப பூஜை, மூல மந்திர ஹோமங்கள் நிறைவடைந்து, மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் 9:30 மணிக்கு புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகின. பின்னர் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனைகள் நிறைவடைந்து, பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.