எமனேஸ்வரம் அனுமன் கோயிலில் சீதாராமன் திருக்கல்யாணம்
ADDED :843 days ago
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஆஞ்சநேய பெருமான் கோயிலில் மண்டலாபிஷேகம், சீதாராமன் திருக்கல்யாணம், பட்டாபிஷேக விழா நடந்தது.
இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நிறைவடைந்து நேற்று முன்தினம் காலை 8:00 மணி முதல் மண்டலாபிஷேக வைபவம் நடந்தது. 108 கலச பூஜை, ராமர், அனுமன் காயத்ரி ஹோமங்கள், மகாபூர்ணாகுதி நிறைவடைந்து. சீதா ராமாபிரான், லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை சீர்வரிசை புறப்பாடு நிறைவடைந்து, சீதாராமருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று காலை 9:00 மணி தொடங்கி சீதாராமபிரானுக்கு பட்டாபிஷேக பெருவிழா, மணிமகுடம் சாற்றுதல் நிறைவடைந்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பூ பல்லக்கில் சீதாராமர், ஆஞ்சநேய சுவாமி வீதி உலா நடந்தது. இந்த கோலாகலமான விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.