ஐயப்பன் பூஜா சங்கத்தில் ராதா கல்யாண மகோற்சவம்
ADDED :788 days ago
கோவை; ராம் நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் மற்றும் நாம சங்கீர்த்தனா டிரஸ்ட் இணைந்து ஸ்ரீமத் பாகவத சப்தாக யக்ஞம் கடந்த 6ம் தேதி முதல் நடந்து வருகிறது.இதன் நிறைவு நாள் நிகழ்வாக ராதா கல்யாண மகோத்சவம் நடந்தது. இந்த நிகழ்வில் கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் நரசிபுரா தாலுக்கா தலக்காடு திரு முக்கூடல் ஸ்ரீ பாலகிருஷ்ணானந்த மகா சமஸ்தானம் ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.