ராமேஸ்வரம் கோயிலில் இளையராஜா தரிசனம்
ADDED :1149 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இசை அமைப்பாளரும், எம்.பி., யுமான இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.
ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு நேற்று வருகை தந்த இளையராஜாவை ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல் ஜபார் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். பின் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை உள்ளடக்கிய தீர்த்தத்தை இளையராஜா தலையில் தெளித்து புனித நீராடினர். பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் இளையராஜா பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின் கோயில் குருக்கள் இளையராஜாவுக்கு பிரசாதம் வழங்கினர். இதனையடுத்து காரில் புறப்பட்ட இளையராஜா மதுரை சென்றார்.