உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த முப்பெரும் தேவியர்

ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த முப்பெரும் தேவியர்

கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


கோவை, ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புரட்டாசி உத்திரம் நட்சத்திரம் மற்றம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். துர்கா லக்ஷ்மி சரஸ்வதி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மன்களை வழிபட்டுச் சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !