கோவை மதுக்கரை மலை மேல் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :2 minutes ago
கோவை: புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் தர்மலிங்கேஸ்வரருக்கும் நந்தி பகவானுக்கும் சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது. இதில் தீப ஒளி அலங்காரத்துடன் தர்மலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.