அலங்காநல்லூர் நவநீதகிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1141 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே ரங்கராஜபுரத்தில் நவநீதகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஆக., 18ல் முதல் கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 4ம் கால யாக பூஜை விஸ்வரூப தரிசனம், கோ பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. பாலகிருஷ்ண பட்டாச்சார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். ருக்மணி, சத்தியபாமா சமேத நவநீதகிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.