கோட்டை வராஹி வழிபாட்டு மன்றத்தில் நாகசதுர்த்தி பூஜை
ADDED :891 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோட்டை வராஹி வழிபாட்டு மன்றத்தில் இன்று நடக்கும் நாகபஞ்சமி பூஜை துவக்கமாக நேற்று நாக சதுர்த்தி வழிபாடு நடந்தது. சிறப்பு அபிஷேகம் முடிந்து மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இன்று நாகபஞ்சமி பூஜை, கருட பஞ்சமி பூஜை, விளக்கு பூஜை நடக்கிறது.