பழநியில் பக்தர்கள் கூட்டம்
ADDED :1007 days ago
பழநி: பழநி முருகன் கோவிலுக்கு ஞாயிறு விடுமுறை நாளான காலை நேரத்தில் பக்தர்கள் கூட்டம் இருந்தது.
பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச், தரிசன வரிசையிலும் பக்தர்கள் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். ரோப்கார் சேவை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. பழநி மலை அடிவாரம், கிரிவீதி சன்னதி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருந்தது. ஆவணி முகூர்த்த நாள் காரணமாக திருஆவினன்குடி கோயிலில் திருமணம், காதுகுத்து, பெயர் சூட்டுதல் விசேஷங்கள் நடந்தது. இதனால் சன்னதி வீதியில் கூட்டம் அதிகம் இருந்தது. அடிவாரம் முக்கிய வீதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.