உலக நன்மை வேண்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் பஞ்சமி பூஜை
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த பஞ்சமி யாகவேள்வி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் பஞ்சமி பூஜையையொட்டி கலசங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வாராகி அம்மன் பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருள உலக நன்மை வேண்டி யாக பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தங்களுடைய பிரச்சினைகள் விலக வேண்டும் என்றும், பிணி விலகுவதற்கும், தொழில் தடை நீங்குவதற்கும் இலுப்ப எண்ணெயில் வெள்ளை பூசணிக்காயில் விளக்கேற்றி வழிபாடு செய்தார்கள். இந்த யாக வேள்வி பூஜையில் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்ட பக்தர்களும் சுற்று வட்டார பக்தர்களும் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். வாராகி அறக்கட்டளை மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சஞ்சீவி சுவாமிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.