தன்னாசியப்பன் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
ADDED :836 days ago
கோவை: வெள்ளலூர், இடையார்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ தன்னாசியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, யாகசாலை பூஜையைத் தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து கும்பகலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் தன்னாசியப்பன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.