உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட ராஜகோபுரம் அமைக்க ஸ்தபதிகள் ஆய்வு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட ராஜகோபுரம் அமைக்க ஸ்தபதிகள் ஆய்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ராஜகோபுரம் அமைப்பதற்கான பணியினை இந்து அறநிலையத்துறை ஸ்தபதிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் பிரம்மாண்டமான ராஜகோபுரம் அமைக்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். இதையடுத்து ராஜகோபுரத்தின் அஸ்திவாரப்பகுதி நில அளவீடு செய்யப்பட்டது. கல்காரத்தின் ஸ்திரத்தன்மை  ஆய்வு செய்யபட்டது. நேற்று கோவிலின் மேற்பகுதியை ஸ்தபதிகள் ஆய்வு செய்தனர். இந்தியாவிலேயே மிக உயரமான ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை அமைத்த சிவப்பிரகாசம் ஸ்தபதியின் மகன் ஆனந்த் ஸ்தபதி, இந்து  அறநிலையதுறை மண்டல ஸ்தபதி செந்தில் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது கோவில் மேலாளர் ஆனந்த் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !