மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
ADDED :834 days ago
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு 40 நாட்களுக்கு ஒரு முறை பக்தர்கள் காணிக்கை செலுத்திய ஒன்பது உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும். கடந்த மாதம் ஆடி மாதம் என்பதால் கூடுதலாக ஐந்து உண்டியல்கள் வைக்கப்பட்டு அதனையும் சேர்த்து எண்ணப்பட்டது. சிவகங்கை அறநிலையத்துறை துணை ஆணையர் அருணாச்சலம், உதவி ஆணையர் செல்வராஜ், மடப்புரம் கோயில் செயல் அலுவலர் வில்வமூர்த்தி , கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 31 லட்சத்து, 15 ஆயிரத்து 138 ரூபாய், 154 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளி காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.