உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணி மாதம் விஷ்ணு பெருமானுக்கு 10 நாள் திருவிழா நடக்கும். அதன்படி நேற்று 10 நாள் திருவிழா
துவங்கியது. திருவேங்கடம் விண்ணவரும் பெருமாள் (தெற்கிடம் பெருமாள்) சுவாமிக்கு நேர்எதிரேயுள்ள கொடிமரத்தில் நேற்று காலை 9 மணிக்கு கேரள தந்திரி தலைமையில் கொடியேற்றப்பட்டது. விழாவில் விஜய்வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களில் தினமும் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு, அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் காலையும், மாலையும் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் வாகன ரதவீதி உலாவும் நடக்கிறது. 9ம் திருவிழாவன்று மாலை 5மணிக்கு தேவேந்திரன் தேரில் தம்பதி சமேதராக பெருமாள்சுவாமி எழுந்தருள தேர் திருவிழா நடக்கிறது. இரவு 7 மணிக்கு கருடவாகன பவனியும், 10 மணிக்கு திருஆராட்டும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !