யோக நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திர சிறப்பு அலங்காரம்
ADDED :1080 days ago
விழுப்புரம், வளவனுார் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு யோக நரசிம்மர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வளவனுார், அக்ரஹாரம் பகுதியில் வேதவல்லி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, சுவாதி நட்சத்திரத்தை யொட்டி, நேற்று முன்தினம் மாலை 4.00 மணிக்கு யோக நரசிம்மருக்கு திருமஞ்சன விழா நடந்தது. இதையொட்டி, மூலவர், யோக நரசிம்மர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பட்டாச்சாரியார் அமுதன் செய்திருந்தார்.