உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று வரலட்சுமி விரதம்; மகாலட்சுமியை வழிபட இழந்த செல்வம் கிடைக்கும்.. கணவனின் ஆயுள் நிலைக்கும்

இன்று வரலட்சுமி விரதம்; மகாலட்சுமியை வழிபட இழந்த செல்வம் கிடைக்கும்.. கணவனின் ஆயுள் நிலைக்கும்

ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகள் மேற்கொள்வது வரலட்சுமி விரதம். இந்நாளில் பூஜையறையில் மாக்கோலமிட்டு, மகாலட்சுமியை மலர்களால் அலங்கரித்து வழிபடுவர். நிறைகுடத்தில் தேங்காய், மாவிலை, லட்சுமியின் மஞ்சள் முகம் ஆகியவற்றை வைத்து லட்சுமியை ஆவாஹனம் செய்வர். மணமான பெண்கள் இந்த விரதமிருந்தால் மஞ்சள், குங்குமத்துடன் வாழும் பேறு கிடைக்கும். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள் லட்சுமி. இந்நாளில் பூஜையறையில் மாக்கோலமிட்டு, மகாலட்சுமியை மலர்களால் அலங்கரித்து வழிபடுவர். மகாலட்சுமிக்கு மாதுளையை பிரசாதமாக படைத்து வழிபட செல்வம் சேரும். இன்று புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு சமமாகும். 


பிடித்த பிரசாதங்கள்: வரலட்சுமிக்குரிய நைவேத்யங்கள் பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சை. இவற்றில் அவரவர் வசதிக்கேற்ப பிரசாதங்களைப் படைக்கலாம். இது பெண்கள் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இருக்கும் விரதமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !